The modern world of
absorbing gadgets
Translated by
P.R.Ramachander
(Here is
translation of a very meaningful post
by my facebook friend Rajagopal Srinivasan about
our being busy with gadgets, which makes us move away from those who love us.)
I am not able to
see faces,
Of those who cross me to the front ,
I was not able to understand the thought,
Of those who stand
behind me and laugh,
My journey is done with bent head,
Hands touching
the screen,
For the world was
in my palm.
My cell phone
became my sweet darling,
The Wife whom I had
married went off far away.
Very close friends and relatives were in family group ,
My friend and his friend
in the Friends group,
After the cock of the dusk crowed,
And before hearing the sound of cock at dawn ,
I started getting
drowned in Whatsapp.
I started forgetting
the spring called realty,
Due to the shadow
,
Birthday greetings to all and sundry ,
Condolences for some unknowns death ,
When some body messaged
me “Hi” ,
I sent back the message
“Hai”,
For some
peculiar reason ,
When my own son called
mr “Dad”,
I lifted slightly
my eye brows,
And burnt him just by my look.
I saw the “Status
of others” and enjoyed it ,
I wondered seeing
the “Profile”,
I got merged seeing “The picture messade,
In the mad interest in downloading Videos,
After washing
my hand
I started thinking ,
About “What I
ate just before that?”
The fish dish of
the uncle’s home,
The Papads
fried by my own aunt ,
The tomato rice prepared by my younger sister,
My elder brother’s wife
told “it is a mixture side dish”,
I started
fighting day in and day out ,
With wife who
gave me nectar,
And I laughed
within myself saying,
“It is worse than poison”
I started
crying within myself ,
I started wondering within myself,
I myself started
appreciating ,
I
Not only
myself ,
Complained that everything is in Android,
And started
wandering in search of Network.
Enen in Keemoji ,
Laugh, cry, sorrow , shyness ,
Dance , song , family
, friendship are there.
But,
When I straightened up and saw ,
There was no one
before me ,
Relations and friends,
Started crossing me with the world in their palm,
Oh relations ,
Please smiling
seeing me directly ,
Oh friend,
Come the way side
stalls ,
Is p doing penance
for our coming.
முன்
கடந்து போவோரின்
முகம்
காண முடியவில்லை.
பின்
நின்று சிரிப்போரின்
எண்ணம்
எனக்கு புரியவில்லை.
தலை
தாழ்ந்தே எங்கும் பயணம்.
தொடுதிரையை
தொட்டபடி
உள்ளங்கையில்
தான் உலகம்.
என்
கைபேசி காதலியானாள்- நான்
கட்டிய
மனையாள் நெடுந்தூரம் போனாள்...
உற்றாரும்
உறவினரும் Family குரூப்பில்,
நண்பனும்
அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.
சாமக்
கோழி கூவிய பின்னும்,
கொக்கரக்கோ
கேட்கும் முன்னும்,
வாட்ஸ்சாப்பில்
மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.
எவர்
எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.
Hi என
எவரோ அனுப்ப
Hai என
பதிலுரைத்தேன் - ஏனோ
நான்
பெற்ற பிள்ளை
'அப்பா'என்றழைக்க,
சற்றே
புருவம் உயர்த்தி
பார்வையாலே
சுட்டெரித்தேன்...
அடுத்தவரின்,
Status பார்த்து
ரசித்தேன்,
profile பார்த்து
வியந்தேன்,
Picture Msg பார்த்து
லயித்தேன்,
video பதிவிறக்க
ஆர்வத்தில்.
கை
அலம்பியபின் யோசித்தேன்.
நான்
என்ன சாப்பிட்டேன் என்பதை...
மாமன்
வீட்டு மீன் குழம்பு,
மாமி
பொறித்த அப்பளம்,
தங்கை
வீட்டு தக்காளிச்சோறு,
மதனி
சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,
அமிர்தம்
தந்த மனையாளிடம்.
இது
நஞ்சை விட கேவலமென்று...
நானாய்
சிரித்தேன்,
நானாய்
அழுதேன்,
நானாய்
வியந்தேன்,
நானாய்
ரசித்தேன்-ஏனோ
நான்,
நானாய்
மட்டும் இல்லை...
ஆண்ட்ராய்டில்
அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.
என்
குடும்பம் விலகி போவதை கண்டும் கூட
Network கிடைக்கும்
இடம் தேடி அலையலானேன்...
கீமோஜியில்
கூட
சிரிப்பு,
அழுகை, சோகம், வெட்கம் ,
ஆடல்,
பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.
ஆனால்...
நான்
நிமிர்ந்து பார்க்கும் போது
என்
முன்னே எவருமில்லை.,
சுற்றமும்,
நட்பும்
உள்ளங்கை
உலகத்தோடு எனை கடந்து போயினர்...
இது
வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்
சொந்தமே.,
இனி
என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.
நட்பே.,
வா தெருவோர டீக்கடை நமக்காய் தவம் தவம் கிடக்கிறது...!
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander