Pages

Friday, June 1, 2018

Greatness of Coffee


காப்பி மஹாத்மியம்
Greatness  of Coffee         

By
Subramaniam Swaminathan

Translated by
P.R.Ramachander




காப்பி மஹாத்மியம் கனிவுடன் பொழிந்திட
காராம்பசுவே கருணை செய்வாய்
காப்பி பில்டர் டபராடம்ளர்
சர்க்கரை டப்பா துணை புரிவாய்

For  being able  to write the greatness of coffee ,
Oh Milch  Cow , be kind  to me,
Let  Coffee  filter , Dowra , tumbler ,
And sugar container   please  help me

எவருக்கு எப்படிப் பிடிக்குமோ அப்படி
காப்பியைக் குடித்திட வரம் தருவாய்
பில்டர் காப்பி காலையும் மாலையும்
என்றென்றும் கிடைத்திட அருள் புரிவாய்

Please  give a boon   to drink coffee in sucha way,
That each  person gets, the  coffee   which he wants,
Please    help me    to get for  ever , Filter  coffee,
In the  morning   as well as    evening 

பாட்டி காலம் முதல் latte காலம் வரை
காப்பி வளர்ந்தது படிப்படியாய்
Moonலும் Marsலும் கூட ஒருநாள்
காப்பியை நீயும் குடித்திடுவாய்

The coffee   which  step by  step altered,
From Grandma’s days till the  Latte   days,
Would    slowly grow up in such a way,
That one   day you would drink it  in moon and mars


பொங்கும் நீரைப் பொடியினில் ஊற்ற
ஸ்ட்ராங்காய் டிகாக்ஷன் கிடைத்திடுமே
பாலும் சர்க்கரையும் பதமாய்ச் சேர்க்க
firstclass காப்பி பிறந்திடுமே

When the  boiling water  is poured in the powder ,
You would get   very strong decoction,
And when proper amount of   sugar  and milk,
Ir added   to it we will get first class  coffee

காப்பிக்கொட்டையை வாங்கி வறுத்து
வீட்டில் அரைத்தது அந்தக் காலம்
ஆன் லைனில் காப்பிப் பொடியை ஆர்டர்
செய்து வரவழைப்பது இந்தக் காலம்

During olden days    we used to buy  coffee seeds,
Fry it and then  powder it in the home  ,
In these   days , we order  coffee powder ,
On line   and get it without any hassles,

பித்தளை வெங்கல பில்டரில் ருசியாய்
டிகாக்ஷன் போட்டது அந்தக் காலம்
காப்பி மேக்கரில் கரண்டைச் செலுத்தி
டிகாக்ஷன் வடிப்பது இந்தக் காலம்

During the olden days   decoction  was prepared,
In brass   and bell metal   filters, but now,
We send electric current  ib coffee maker,
And get the decoction   without  any problem.

முதலாம் டிகாக்ஷனை உடனே எடுத்து
டிகிரி காப்பி போட்டது அந்தக் காலம்
நெஸ்காபி, Bru இன்ஸ்டன்ட் காப்பியை
ஸ்பூனால் கலக்கிக் குடிப்பது இந்தக் காலம்

During those days  , we will extract  the first decoction,
And make   Degree  coffee   using it,
And in these  days  we use Instant coffee ,
Named  Nescafe  and Bru and mix it with a spoon.

டிகாக்ஷன் தூக்கல் பாலும் குறைச்சல்
பேருக்கு சர்க்கரை ஸ்ட்ராங்க் காப்பி
துளியூண்டு டிகாக்ஷன் பாலும் அதிகம்
இஷ்டம்போல் சர்க்கரை லைட் காப்பி

Strong coffee  is made  using more decoction,
Less milk and nominal   Sugar,
Light coffee  is made by  very less decoction,
More milk and as much sugar as we want.

சுக்குக் காப்பி தலைவலி போக்கும்
கொத்தமல்லிக் காப்பி பித்தம் தீர்க்கும்
Bed காப்பி சிலருக்கு ஊக்கம் கொடுக்கும்
Black காப்பி hangover போக்கிடுமே

Ginger coffee   would cure  head ache,
Dhania   coffee  would cure anaemia ,
Bed coffee would give  energy to few ,
And Black coffee   would remove hangover

Cappucino, எஸ்ப்ரெஸோ, latte என்று
எத்தனையோ காப்பி வந்தாலும்
கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இங்கே
வேறொரு காப்பி இணையாகுமோ

Though   very many new types of   coffee,
Called  Latte  and Espresso , Cappucino,
In our place  none of them   would ever ,
Be equal to Kumbakonam degree  coffee


No comments:

Post a Comment

I would love to have comments on what I write, Ramachander