வேண்டாம்----
Vendam
Do not need it
Translated by
P.R.Ramachander
வருவது அறியாது செயல் புரிய வேண்டாம்
வஞ்சகர்தம் நட்பென்று நாட வேண்டாம்
கருவத்தால் பிறர் வருந்தப் பேச வேண்டாம்
கடமைகளைச் செய்திட பின்வாங்க வேண்டாம்
Varuvathu
ariyaathu cheyal puriya vendam,
Vanchakar tham natpendru Naada vendam
Karuvatha; pirar
varuntha pesa vendam
Kadamaikalai
cheithida pin vanga vendam
Do
not do anything without knowing what is coming,
Do
not seek that which is known as friendship
of evil person
Due
to pride do not talk making others sad
Do
not withdraw from doing your duties
மர்மமாய் பகையை உள்வாங்க வேண்டாம்
மற்றவர் வாழ்வு கண்டு மருக வேண்டாம்
தர்ம வழி விட்டு என்றும் நடக்க வேண்டாம்
தாழ்ந்தவரைத் துச்சமாய் பேச வேண்டாம்
Marmamai pakayai
ul vaanga vendam
Mathavar vaazhvu kandu maruka vendam
Dharma
vazhi vittu yendruim nadakka vendam
Thazhnthavarai
thuchamai pesa vendam
Secretly
do not store enmity in the mind,
Do
not become sad seeing other peoples
lives
Do
not ever leave the path of Dharna and live
Do
not talk about poor people in a bad way
பொறுமை எனும் பூஷணத்தைத் தொலைக்க வேண்டாம்
பொன்னுக்குப் போராடி மடிய வேண்டாம்
திருவளரும் தாய்க் குலத்தை வருத்த வேண்டாம்
தீனர்களுக்கு உதவி செய்யத் தயங்க வேண்டாம்
Porumai
yenum bhoohanathai tholaikka vendam,
Ponnukku
poradi madiya vendam,
Thiru
valarum thai kulathai varutha vendam
Dheenarkalukku udhavi
cheyya thayanga vendaam
Do
not loose the ornament called patience,
Do
not die fighting for gold,
Do
not make sad our mothers clan where prosperity grows
Dop
not hesistate to help poor
people
உருவ மயக்கில் உள்ளத்தை இழக்க வேண்டாம்
சர்வ பரிபூரணனை மறக்க வேண்டாம்
Uruva
mayakkil ullathai yizhakka
vendam,
Sarva paripoorananai marukka
vendam
Due to attraction , do not loose your mind
Do
not forget God who has
every thing
சந்ததமும் சாந்தியுடன் வாழ வழி இதுவே.
Santhathamum santhiyudan
vaazha vazhi ithuve
This is the way to live always with peace
----ஆண்டவன் பிச்சை அம்மா
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander