An interest in
Diabetes
BY
Sri Yezhil Arasu
Sokka lingam
Translated by
P.R.Ramachander
(I thought this
write by Sri Sokka Lingam would be
very useful to those affected by Diabetes.I am only trying the message to reach those
who do not know Tamil.I have
given the Tamil Text below my Translation)
1.Hear an explanation
about diabetes disease,
Take interest in this
and live for several years,
There is no need
to be scared of shortage, we can,
Live with satisfaction, please hear
these words.
2.Pancreas is an
organ behind the stomach,
Its responsibility is to produce Insulin
The job of
insulin is to control,
The sugar in the
body only
3.If the amount of insulin gets reduced,
The balance of
blood sugar will get upset,
More sugar will go
to the kidney,
And trying to remove it , kidney will get damaged.
4.These are the symptoms
of diabetes , knowing ,
Them with interest and
testing them will do good,
Neglecting it is
a mistake and this
is also called,
By another
name-“the killer of peace “.
5.Passing of
urine very frequently and because of that,
Becoming
thirsty very often and ,
Increase of hunger
and also ,
Itching below
the feet often are
important symptoms
6.If you
notice these symptoms
in you,
You have to
get urine tested
for sugar.
Also test sugar in
the blood and after that.
Consult the
doctor and seek his advice
The
things that sick people
have to follow
7.The food that we take
three times everyday,
Should be
divided and taken in five times,
Daily we should
practice to walk and if ,
Weight of body has
increased , we should reduce it.
8.Do not observe fast,and great feasts,
Are not also
accepted by this disease,
Without
missing we have to take food,
If we delay
Sugar will go down and we will
faint
Food
types
9.You have reduce
rice based food-Instead,
WE should take Bajra and maize,
Avoid taking
gruels and paste like food,
You should also practice limited food in take
You should also practice limited food in take
10.We should bring
down quantity of rice, instead,
We should consume
varieties of Vegetables,
You should
avoid oily food and take,
Boiled pulses in
the morning
11.WE should avoid food based on roots and tubers, You should,
Stop taking all
sweet fruits, but
Small bits or
orange, Apple , Papaya and Guava.
Can be taken but
not in large quantities
12.When we
drink coffee ,tea and milk
, it is ,
Better that we drink them without adding sugar,
If you feel
having some thing of sweet taste,
You can add
limited quantities of sweet
substitutes
13.You have to reduce in take of fatty food, If you are,
Short
tempered learn how
to control it,
Mental tension
increases sugar, we have
Avoid that and
learn to be peaceful
Original text in Tamil
சர்க்கரை
மீது அக்கறை
By
திரு
எழிலரசு சொக்கலிங்கம்
மெட்டு:
"நந்த வனத்தில் ஓர் ஆண்டி" எனும் பாடல்
சர்க்கரை
நோய் விளக்கம் கேளுங்கள்-இதில்
அக்கறை கொண்டு பல்லாண்டு வாழுங்கள்
குறை பற்றி அச்சம் தேவையில்லை- மன
நிறைவுடன் வாழலாம் கேளுங்கள் சொல்லை. (சர்க்கரை நோய்)
அக்கறை கொண்டு பல்லாண்டு வாழுங்கள்
குறை பற்றி அச்சம் தேவையில்லை- மன
நிறைவுடன் வாழலாம் கேளுங்கள் சொல்லை. (சர்க்கரை நோய்)
இரைப்பைக்கு
அடியில் உள்ள உறுப்பு-கணையம்
'இன்சுலின்' சுரப்பதே இதனுடைய பொறுப்பு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு- அதைக் கட்டுப் படுத்துவதே
இன்சுலின் செயலாம். (சர்க்கரை நோய்)
'இன்சுலின்' சுரப்பதே இதனுடைய பொறுப்பு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு- அதைக் கட்டுப் படுத்துவதே
இன்சுலின் செயலாம். (சர்க்கரை நோய்)
இன்சுலின்
அளவு குறையுமானால் -இரத்தச் சர்க்கரை அளவு சீர்கெட்டுப்போகும்
அதிகச் சர்க்கரை சிறுநீரகம் போகும்- அதைச்
சிறுநீரில் வெளியேற்றி அகங் கெட்டுப் போகும் ( சர்க்கரை நோய்)
அதிகச் சர்க்கரை சிறுநீரகம் போகும்- அதைச்
சிறுநீரில் வெளியேற்றி அகங் கெட்டுப் போகும் ( சர்க்கரை நோய்)
சர்க்கரை
நோய் அறிகுறிகள் சிலவாம்- அவற்றை
அக்கறையுடன் அறிந்து சோதித்தல் நலமாம்
அலட்சியமாய்இருப்பதென்றும் தவறு- இதற்கு
"அமைதிக் கொல்லி" என்று மற்றொரு பெயரு ( சர்க்கரை நோய்)
அக்கறையுடன் அறிந்து சோதித்தல் நலமாம்
அலட்சியமாய்இருப்பதென்றும் தவறு- இதற்கு
"அமைதிக் கொல்லி" என்று மற்றொரு பெயரு ( சர்க்கரை நோய்)
அடிக்கடி
சிறுநீர் கழித்தல்- அடுத்து
அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்
பசியின்அளவு கூடுதல் - மற்றும்
பாதத்தில் அடிக்கடி எரிச்சல் எடுத்தல். ( சர்க்கரை நோய்)
அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்
பசியின்அளவு கூடுதல் - மற்றும்
பாதத்தில் அடிக்கடி எரிச்சல் எடுத்தல். ( சர்க்கரை நோய்)
இவ்வறிகுறிகள்
தென்படு மாயின்- நம்
சிறுநீரில் சர்க்கரைக்கு ஆய்வு செய்ய வேண்டும்
இரத்தச் சர்க்கரை ஆய்வும் செய்க- தொடர்ந்து
மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுக. ( சர்க்ரை நோய்)
சிறுநீரில் சர்க்கரைக்கு ஆய்வு செய்ய வேண்டும்
இரத்தச் சர்க்கரை ஆய்வும் செய்க- தொடர்ந்து
மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுக. ( சர்க்ரை நோய்)
நோயாளிகள்
பின்பற்ற வேண்டியவை
மூன்று
வேளை உண்ணும் உணவை-இனி
ஐந்து வேளையாகப் பிரித்து உண்ண வேண்டும்
நடைப்பயிற்சி நாள்தோறும் வேண்டும் - உடல்
எடை கூடியிருந்தால் குறைத்திடவும் வேண்டும்.(சர்க்கரை நோய்)
ஐந்து வேளையாகப் பிரித்து உண்ண வேண்டும்
நடைப்பயிற்சி நாள்தோறும் வேண்டும் - உடல்
எடை கூடியிருந்தால் குறைத்திடவும் வேண்டும்.(சர்க்கரை நோய்)
விரதம்
இருத்தல் கூடாது- பெரு
விருந்தும் இந்நோய் ஏற்றுக் கொள்ளாது
நேரம் தவறாது உண்ணவேண்டும்- காலம்
தாழ்த்தினால் சர்க்கரை குறைந்து மயக்கம் தோன்றும் (சர்க்கரை)
விருந்தும் இந்நோய் ஏற்றுக் கொள்ளாது
நேரம் தவறாது உண்ணவேண்டும்- காலம்
தாழ்த்தினால் சர்க்கரை குறைந்து மயக்கம் தோன்றும் (சர்க்கரை)
உணவு
வகைகள்
அரிசி
உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - பதிலாய்
கேழ்வரகு, வரகு உணவு சேர்க்க வேண்டும்
கஞ்சி, கூழ் தவிர்த்திட வேண்டும்- திட
உணவையும் அளவோடு உண்ணும் பழக்கம் வேண்டும் ( சர்க்கரை)
கேழ்வரகு, வரகு உணவு சேர்க்க வேண்டும்
கஞ்சி, கூழ் தவிர்த்திட வேண்டும்- திட
உணவையும் அளவோடு உண்ணும் பழக்கம் வேண்டும் ( சர்க்கரை)
சோற்றின்அளவைக்
குறைத்திட வேண்டும்- பதிலாய்
காய் வகைகள் நிறையச் சேர்த்திட வேண்டும்
எண்ணெய்ப் பலகாரம் தவிர்த்து- பயறு
சுண்டல்வகை மாலையில் சாப்பிட வேண்டும். ( சர்க்கரை நோய்)
காய் வகைகள் நிறையச் சேர்த்திட வேண்டும்
எண்ணெய்ப் பலகாரம் தவிர்த்து- பயறு
சுண்டல்வகை மாலையில் சாப்பிட வேண்டும். ( சர்க்கரை நோய்)
கிழங்கு
வகை தவிர்த்திடவும் வேண்டும்- இனிக்கும்
பழங்களை உண்ணுவதை நிறுத்திட வேண்டும்
ஆரஞ்சு ஆப்பில் பப்பாளி கொய்யா- போன்ற
பழங்களைப் பகுதியாக மட்டும் உண்ண வேண்டும் ( சர்க்கரை)
பழங்களை உண்ணுவதை நிறுத்திட வேண்டும்
ஆரஞ்சு ஆப்பில் பப்பாளி கொய்யா- போன்ற
பழங்களைப் பகுதியாக மட்டும் உண்ண வேண்டும் ( சர்க்கரை)
காஃபி,
டீ, பால் அருந்தும்போது -உடன்
சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நன்று
இனிப்புச் சுவை தேவைப்படுமாயின்- சர்க்கரைப்
பதிலியை அளவாய்ச் சேர்த்தல் வேண்டும். ( சர்க்கரை)
சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நன்று
இனிப்புச் சுவை தேவைப்படுமாயின்- சர்க்கரைப்
பதிலியை அளவாய்ச் சேர்த்தல் வேண்டும். ( சர்க்கரை)
கொழுப்பு
உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்- பெருங்
கோபம் வருமாயின் தணித்துக் கொள்ளவேண்டும்
மனஅழுத்தம் சர்க்கரையைக் கூட்டும்- அந்த
அழுத்தம் தவிர்த்து அவர் அமைதி காக்கவேண்டும் ( சர்க்கரை)
கோபம் வருமாயின் தணித்துக் கொள்ளவேண்டும்
மனஅழுத்தம் சர்க்கரையைக் கூட்டும்- அந்த
அழுத்தம் தவிர்த்து அவர் அமைதி காக்கவேண்டும் ( சர்க்கரை)
சில
சொற்களுக்கு விளக்கங்கள்
கணையம் - நம் இரைப்பைக்கு(வயிற்றுக்கு-stomach) அடிப்புறம் உள்ள உறுப்பு.
( pancreas)
அகங் கெட்டுப்போகும்- சிறுநீரகம் கெட்டுப் போகும் என்பதைத் தான், பாடலின் மெட்டுக்காக அவ்வாறு தரப்பட்டுள்ளது.
அமைதிக் கொல்லி- Silent killer- சர்க்கரை நோய் வெளியே
தெரியாமல்,ஆபத்தை விளைவித்துவிடும்.
கவனமாக இருந்தால் கவலை தேவையில்லை.
விரதமும்,விருந்தும் இந்நோய்க்கு ஆகாது.(No fasting or feasting)
சர்க்கரைப் பதிலி- sugar free tablet
மனஅழுத்தம் - pressure
Thank you for this information. This is very helpful to diabetes patient. Now a days diabetes disease is very common. At the age of 40 years people suffering by diabetes and this disease is very in common. If you also suffering from diabetes so you have to diabetes specialist.
ReplyDeleteThank you for this information. This is very helpful to diabetes patient. Now a days diabetes disease is very common. At the age of 40 years people suffering by diabetes and this disease is very in common. If you also suffering from diabetes so you have to diabetes specialist.
ReplyDelete