Those wingless unfulfilled dreams
By
Na.Muthukumar
Translated
by
P.R.Ramachander
(Sri Na. Muthukumar (12 July 1975 – 14 August 2016)
was an Indian poet, lyricist, and author. Best known for his Tamil
language film songs, he received the most number of Filmfare Awards
for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National
Film Award for Best Lyrics .
This poem of his
shakes us with great emotion and
brings tears in to our eyes,making us recall
those unfulfilled dreams of ours)
மழை
பெய்யா நாட்களிலும்
மஞ்சள்
குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ் வகுப்பின்
முதல் நாளன்று
முன்பொரு முறை எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறங்க?"
ரோஜாப்பூ மிஸ் வகுப்பின்
முதல் நாளன்று
முன்பொரு முறை எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறங்க?"
The teacher who was
like rose ,
Who used to come
with an yellow umbrella,
Even on the days
when there was no rain,
On the first day of our class once asked,
“What are you going to become after studies?”
முதல்
பெஞ்சை யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள் கோரஸாக
இன்று கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை வரிசையில்
கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன்
குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது.
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள் கோரஸாக
இன்று கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை வரிசையில்
கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன்
குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது.
Vanitha and kavitha
who never vacated ,
Their seats in the first bench in a chorus said , “Doctor”,
Once in a while I
see Kavitha , who got married,
Standing in the ration shop queue ,
And Vanitha , with a comb tucked in her hair,
Bidding bye to her children going to school.
"இன்ஜினியர்
ஆகப்போகிறேன்" என்ற
எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான்.
எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான்.
Sureshkumar who
said , “I am going to become an engineer,
Failed in a claa in between and had gone to
weave silk yarn.
"எங்க
அப்பாவுடைய
இரும்புக் கடையைப் பாத்துப்பேன்"
கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன் நியூஜெர்சியில்
மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை ஆராய்கிறான்.
இரும்புக் கடையைப் பாத்துப்பேன்"
கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன் நியூஜெர்சியில்
மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை ஆராய்கிறான்.
When C.N.Rajesh told
, “I would look after ,
The steel shop of my father”, every one laughed,
But he is now a doctor
in New Jersey ,
Who also does
research in microbiology.
"பிளைட்
ஓட்டுவேன்" என்று சொல்லி
ஆச்சரியங்களில் எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை ஊழியனானான்.
ஆச்சரியங்களில் எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை ஊழியனானான்.
Auastine Chella Babu, who made us all surprised,
By saying “AS a pilot I would drive a plane”
But he passed out
state public service commission,
And is employed
as the last grade government
servant.
"அணுசக்தி
விஞ்ஞானியாவேன்" என்ற நான்
திரைப் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
திரைப் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
I who told that I
would become a nuclear scientist,
Am today writing
songs for Tamil Films.
வாழ்க்கையின்
காற்று எல்லாரையும்
திசைமாற்றிப் போட,
திசைமாற்றிப் போட,
"வாத்தியாராவேன்"
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும் நாங்கள் படித்த
அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறான்.
குண்டு சுரேஷ் மட்டும் நாங்கள் படித்த
அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறான்.
"நெனைச்ச
வேலையே செய்யற, எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.
Though the storm of life has
pushed us to a scattered destiny.
In different directions , away from our aim,
The Stout
Suresh who told , “I would
become a teacher”
Is working in the same school as teacher ,
And I asked him, “Friend , you realised your dream.”
சாக்பீஸ்
துகள் படிந்த விரல்களால்
என் கையைப் பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும் என் மாணவர்களிடம் நான் கேட்பதே இல்லை! " என்றான்.
என் கையைப் பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும் என் மாணவர்களிடம் நான் கேட்பதே இல்லை! " என்றான்.
- ®நா.
முத்துக்குமார்💯
He held my hand
with his chalk quoted fingers,
And said ,” I never ever
ask the students of my class,
“What are you going to become after studies?”
No comments:
Post a Comment
I would love to have comments on what I write, Ramachander