பாரதி நீ
மட்டும் எப்படி மகாகவி?
Bharathi Nee mattum
yeppadi Maha Kavi?
Bharathi
How only you are
called greatest poet
BY
பிருந்தா
சாரதி
Brinda SArathi
(C. Subramania Bharati[a (born C. Subramaniyan 11
December 1882 – 12 September 1921) was an Indian writer, poet, journalist,
teacher, Indian independence activist, social reformer and polyglot. He was
bestowed the title Bharati for his poetry and was a pioneer of
modern Tamil poetry. He is popularly known by his title Bharati or Bharathiyaar and
also by the other title "Mahakavi Bharati" ("the greatest poet
Bharati"). His works included patriotic songs composed during the Indian
Independence movement He fought for
the emancipation of women against child marriage opposed the caste system and advocated reforms
of the society and religion.
Here is a great
poem where the poet tries to find out why only
he is called Maha kavi(
Greatest poet))
இறந்து
நூறு ஆண்டுகள் ஆன பிறகும்
மறக்க
முடியாத
மகாகவி
நீ.
Iranthu nooru aandukal
aana pirakum
Marakka mudiyaatha
Mahakavi nee
Even after hundred
years of your death
You are the
greatest poet
Who cannot be forgotten
ஏனெனில்
அன்று மரித்தது
வெறும்
தேகம்தான்
இன்றும்
சுடர்கிறது
எழுத்தில்
நீ
வளர்த்த யாகம்தான்.
Yenenil andru marithathu
Veru deham thaan
Indrum chudarkirathu
Yezhuthil
Nee valartha
yaagam thaan
Because what died then
Was your body only
And even today shines
In writing
The fire sacrifice
which you grew
இன்றைய
தமிழின்
முகம்
நீ
நவீனத்
தமிழின்
அகம்
நீ.
எத்தனை
ஆண்டுகள் ஆனபோதும்
யாரும்
மறுக்க முடியாத
மகாகவி
நீ.
Indraya thamizhin
Mukam nee
Naveena
thamizin
Akam nee
Yethanai aandukal
aana pothum
Yaarum marakka
mudiyaatha
Mahakavi nee
You are
Face of today’s Tamizh
You are
The inside of
modern tamizh
You are the
greatest poet
Who cannot be
forgotten
Whatever
number of years are past
பாட்டரசனே
உன்
மீசையின் ரசிகன் நான்
அது
தமிழுக்கு முளைத்த மீசை
தமிழன்னையே
முறுக்கிவிட்ட மீசை.
மகன்
மீசை முறுக்குவதைப் பார்த்து தாயே மகிழ்ந்தாள் அப்போது.
Pattarasane
Un meesayin rasikan naan
Athu
THamizhukku mulaitha meesai
THamizhannaye
murukki vitta meesai
Makan meesai murukkuvathai paaarthu
Thaaye
magizhndhaal appothu
Oh king of songs
I am the fan of your
moustache
That was the moustache which grew to tamil
It was twisted and
trimmed by mother Tamizh herself
Seeing the son
twisting his moustache
The mother
became happy then
முண்டாசுக்
கவிஞனே
உன்
தலைப்பாகை
தமிழுக்கு
நீ சூட்டிய
மகுடம்
அல்லவா?
Mundasu kavinjane
Un thalaippakai
Thamizhukku
Nee Choottiya
Makudam allavaa
Oh turban poet
Your turban
Was it not the crown
You made Tamil
wear
நீ
அணிந்த கோட்டு உன்னைத் தாக்கிய
வறுமைக்கு
நீ வைத்த வேட்டல்லவா?
நீ
கையில் ஏந்திய தடி
உன்
பேனாவின் பிறிதொரு வடிவம் அல்லவா?
அன்னைத்
தமிழுக்கு
ஆயிரமாயிரம்
ஆண்டு வரலாறு
அதில்
ஆயிரம் ஆயிரம் புலவர்கள்
அவர்களில்
நீ மட்டும் எப்படி மகாகவி ?
Nee anintha kottu, unnai
thaakkiya
Varumaikku nee
vaitha vettallavaa?
Nee kayyil
yenthiya thadi
Un penavin
pirithoru vadivam allavaa?
Annai thamizhukky
AAyiramaayiram
aandu varalaru
Athil aayiram aayiram pulavarkal
Avarkalil nee
mattum yeppadi Maha kavi?
Was not the coat that you wore , was
the bomb
That you kept to
the poverty that
attacked you?
The stick that you
held in
your hand
Was it not
another form of your pen?
To mother Tamizh,
There is thousand thousand year history
In that there were
thousand thousand poets
How come , among them you only were the gretest
poet?
ஏனெனில்
எழுதுகோல்
எடுத்தவரில்
சிலர்
மட்டுமே
சிகரம்
தொட்டவர்.
சிகரம்
தொட்ட
சில
முன்னோரின்
உயரம்
தொட்டவன் நீ
சில
முன் ஏர்களின்
ஆழம்
தொட்டவன் நீ
அதனால்
நீ மகாகவி.
Yenenil
Yezhuthu koal yeduthavaril
Chilar mattume,
Sikaram thottavar
Sikaram thotta,
Sila munnorin
Uyaram thottavan
nee
Chila mun yerkalin
Aazham thottavan
nee
Athanaal nee Mahakavi
Because
Among those who
took the pen
Only very few
Touched the peak
Among those
ancestors
Who touched the
peak
You were the
one who touched their top
Among some
ploughs in the front
You were one who
touched deepest depth
And so you are the
greatest poet
உயரம்
தொட்ட பின்
அங்கேயே
நின்று
கொண்டிருக்கவில்லை நீ .
சிகரம்
தாண்டியும்
பாதம்
பதிக்க முயன்றாய்
உனக்குச்
சிறகுகள் கொடுத்தாள் தமிழன்னை.
பெற்றுப்
புதிய வழியைச் சமைத்து வைத்தாய்.
Uyaram thotta pin
Angeye
Nindru kondirukkavillai nee
Sikaram
thaandiyum
Paadham padhikka
muyandrai
Unakku sirakukal
koduthaal thamizh annai
Pethru puthiya
vazhiyai samaithu vaithai
ஆழம்
கண்டபின்
அங்கும்
நீ குடியிருக்க
விரும்பவில்லை
விதையாய்
உன்னை எழவைத்தாள்
நம்
அன்னை.
எழுந்தாய்
மொழியைத்
துளிர்க்க
வைத்தாய் புத்தம்புதிதாய்.
அதனால்
நீ மகாகவி.
AAzham kanda pin
Angum nee kudi irukka
Virmbavillai
Vithayaai unnai
yezha vaithaal
Nam annai
Yezhunthai
Mozhiyai
THulirkka vaithai,
putham puthithaai
Athanaal nee maha
kavi
After seeing the
depth
You did not desire
To live there
Our mother
made you wake up
AS a seed
You woke up
AS language
You made it put
new, new leaves
And that is why
you are greatest poet
உன்
நெஞ்சில் எரிந்த கனலை
எத்தனை
எத்தனை வடிவங்களில் இறக்கி வைத்தாய் நீ?
அமுதினும்
இனிய தமிழால்
கண்ணன்
பாட்டு
ஆயுதத்
தமிழால் பாஞ்சாலி சபதம்
தத்துவத்
தமிழால்
குயில்
பாட்டு
வீரத்
தமிழ் கொண்டு விடுதலைப் பாடல்கள்
புதுமைத்
தமிழால்
வசன
கவிதை
கனித்தமிழ்
கொண்டு கட்டுரை, கதைகள்
பத்திரிக்கை
மொழியால் உரைநடைத் தமிழ் என்று
பலப்பல
வழிகளில்
தமிழை
வளர்த்தாய்.
Vun nenjil yerintha kanalai
Yethanai yethanai
vadivangalil irakki vaithai nee?
Amudhilum iniya thamizhaal
Kannan paattu
Ayudha thamizhaal Panchali sabatham
Thathuva
thamizhaal
Kuyil paattu
Veera thamizh kondu viduthalai Padalkal
Pudhumai
thamizhaal
Vachana kavithai
Kani thamizh kondu katturai, kadhaikal
Pathirikai
mozhiyaal Urai nadai thamizh yendru
Pala pala vazhikalil
Thamizhai
valarthai
With the fire that
burnt in your heart
How many , how many forms you downloaded?
With thamizh sweeter
than nectar
Kannan paattu(Song of Krishna)
With weapon like tamizh
Panchali Sabatham (Oath of Panchali)
With philosophical tamizh
Kuyil paattu(song
of koel)
With valorous tamizh
songs of freedom
With new forms of Tamizh
Prose like poems
With fruit lke tamizh essays and stories
With news paper language, prose style
Like that with
various various types
You nurtured Tamizh
அனைத்திலும்
கலந்தாய் உன்
ஆன்ம
சாரத்தை.
அதனால்
நீ மகாகவி.
Anaithilum
kalanthai un
Aanma saarathai
Athanaal nee Maha Kavi
In everything you mixed,
The summary of
your soul
And because of that , you are greatest poet
பழம்
பெருமை பேசுவதில் ஒரு மகிமை இல்லை என்று
அறை
கூவி
உலகின்
புதுமை அனைத்தையும்
தமிழர்
கண்முன்
கொணர்ந்து
நிறுத்தினாய்.
Pazham
perumai pesuvathil oru mahimai
illai yendru
Arai koovi
Ulakin pudumai
anaithayum
Thamizhar kan mun
Konarnthu
niruthinaai
Feeling that there
is nothing great of talking olden things
You Challenged
And before the
people of Tamizh nadu
You brought , all that
,
Which is new and made it stand before them
புதுக்கவிதையை
இறக்குமதி செய்தாய்
ஹைக்கூ
வடிவம் அறிமுகம் தந்தாய்
சிறுகதை
செதுக்கி
சிறப்புகள்
சேர்த்தாய்
உரைநடை
கொண்டு உணர்ச்சிகள் பெருக்கினாய்
பத்திரிகை
எழுத்தின் பலம்தனைக் காட்டினாய்
கார்ட்டூன்
வரைந்தாய்
சொற்பொழிவாற்றினாய்
எல்லாவற்றிலும்
தமிழின்
உயர்வையே
தரிசனம்
செய்தாய்.
உலக
மேடைகளில்
தமிழை
நிறுத்த
அனுதினம்
நீ அயராதுழைத்தாய்.
அதனால்
நீ மகாகவி.
Puthu kavithayai
irakku mathi cheithai
Haikoo vadivam
Arimukham thanthai
Chiru kathai
chethukki
Chirappukal cherthaai
Urai nadai kondu , unarchikal perukkinai
Pathirakai yezhuthin balam thanai kaattinai
Cartoon varainthai,Chorpozhivu aatrinai
Yellathilum
Thamizhin uyarvaye
Darisanam cheithai
Ulaka medaikalil
Tamizhai nirutha
Anudhinam ayaraathu
uzhaithai
Athanaal nee Maha
Kavi
You imported new
poem style
You introduced the Haiku
poem form
You sculpted short stories
And added many thing special
With prose style
, you enhanced emotions
You showed the
strength of news paper language
You drew cartoon, you gave orations
In everything
You only saw
The greatness of Tamil
To make , Tamizh
stand ,
In international podiums,
You worked day and night
And so you are the greatest poet
துப்பாக்கி
வைத்திருந்தவர்களை விட
எழுதுகோல்
வைத்திருந்த உன்னைப் பார்த்துதான் வெள்ளையர் அரசு
உண்மையில்
வெருண்டது.
ஏனெனில்
துப்பாக்கியை விட
பெரிய
பீரங்கி அவர்களிடம் இருந்தது.
ஆனால்
உன் எழுதுகோலை விட வலிமை மிக்க
ஆயுதம்
எதுவும் அவர்களிடம் இல்லை.
ஆகவே
உன்னை அது விரட்டி விரட்டி
மிரட்டிக்
கொண்டிருந்தது
மிரட்டி
மிரட்டி
விரட்டிக்
கொண்டிருந்தது
அதனால்
நீ மகாகவி.
The government of
white people were more scared,
Than seeing those with pistols , on seeing you with pen
It truly was fraid
Because they had
huge guns
Greater than
pistols but they had
No weapons
stronger than your pen
And so they drove
and drove you
And was scaring you
Making you scared and scared
They kept on
hunting you
That is why you are greatest poet
சிலகாலம்
பாண்டிச்சேரியில்
மையமிட்டுத்
தமிழ்நாட்டை
நோக்கிப்
புயலாய்
அடித்தாய்.
சிலகாலம்
சுதேசமித்திரனில்
பணியாற்றி
அடிமை
தேசத்தில்
வெயிலாய்
அடித்தாய்.
மெல்லத்
தமிழ் இனி சாகும் என்றவரைப்
பேதை
என்றே
முகத்தில்
அடித்தாய்.
அதனால்
நீ மகாகவி.
Chila kaalam
Pondicheriyil
mayyam itu
Tamizh naattai nokki
Puyalai adithai
Chila kala,
Sudesa mithranil paniyatri
Adimai desathil
Veyyilai adithai
Mella, thamizh ini chakum yendravaeai
Pethi yendre
Mukathil adithai
Athanaal nee maha Kavi
பாட்டுக்கொரு
புலவனே
எங்கள்
பாட்டனே
உன்னை
நினைத்தால்
என்
நெஞ்சம் நெகிழ்கிறது
கண்கள்
கசிகிறது.
வாழும்போது
உன்
வீட்டில் உலை வைக்க வழியில்லை
செத்த
பிறகு உனக்குச் சிலை வைக்காத இடமில்லை.
பசியை
ருசி பார்த்துக்கொண்டே தமிழுக்குப் பந்தி வைத்த
வள்ளல்
அல்லவா நீ .
அதனால்
நீ மகாகவி.
Paattukkoru
pulvane
Yengal paattane
Unnai ninaithaal
Yen nenjam
negizhkirathu
Kankal kasikirathu
Vaazhum poathu
Un veettil
ulai vaikka vazhiyllai
Chetha piraku unakku
chilai vaikkatha idamillai
Pasiyai ruche paathru
konde thamizhukku pandhi vaitha-
Van allavaa nee
Athanaal nee
mahakavi
Oh poet of all songs
Our grandfather
If I think of you
My heart melts
My eyes becomes wet
While living
There was no way
to light the stowe
After your death,
there is no place where your statue is not there
Are you not one who kept
a great feast to Tamil,
While you were
tasting hunger
Because of that
you are the greatest poet
நூறாண்டுகள்
கடந்து
உன்
எழுத்துக்களை வாசிக்கிறேன்
ஒவ்வொரு
சொல்லிலும் உன் உயிர்ச்சுடர் எரிகிறது
உனக்காக
எதையும் நீ எழுதவில்லை
நாட்டுக்காக
எழுதினாய்
உலகுக்காக
எழுதினாய்
என்றும்
நிலைக்கும்
உண்மைக்காக
எழுதினாய்.
அதனால்
நீ மகாகவி.
Nooraandukal
kadantu
Un yezhuthukalai vaasikkiren
Ovvoru chollilum
uyir chuddar yerikirathu
Unakkaga
yethayum nee yezhuthavillai
Naattukkaka yezhuthinaai
Ulakukkaka
yezhuthinaai
Yendrum nilaikkum
Unmaikkaka yezhuthinaai
Athanal nee Maha
kavi
After passing of
hundred years
I am reading your
writings
In each of your words
the fkame of the soul shines
You wrote for your
country
You wrote to the world
You wrote to the truth
Which forever lives
And because of that you are the greatest poet
ஆயுத
எழுத்தை எப்போதாவது பயன்படுத்துபவர்கள் நாங்கள் ...
அதுவும்
எழுத்தில்.
நீ
எழுதியவை எல்லாமே
ஆயுத
எழுத்துதான்
எழுதிய
இடமோ
எதிரியின்
கழுத்தில்.
அதனால்
நீ மகாகவி.
AAyutha ezhuthai
yeppothaavathu payan paduthupavarkal naankal
Athuvum yezhuthil
Nee
yezhuthiyavai yellamme
Aayuda ezhuthu thaan
Ezhuthiya idamo
Ethiriyin
Kazhuthil
Athanaal Nee Mahakavi
WE are ones who
rarely use the weapon Alphabet(last tamil alphabet'ஃ')
That too in writing
But what all you
write
Are weapon letters
only
And the place you
wrote
Was the neck of
your enemy
And because of that you are the greatest poet