பாட்டி(Grandma)
Translated
by
P.R.Ramachander
( I located this great piece of writing
in one of the Tamil poem web site.I do not know who wrote it . This is
supposed to be written by a grand daughter about her late
grand mother . It moved me a lot
. I have tried my best to keep the
emotions in tact and also a word by word translation. Those who like it
may please read another of my translation of a tamil poem about father’s
mother . If you like this you would like that . You can read that in https://rajathathablog.blogspot.in/2008/09/mom-of-dad-appatha.html
)
பாட்டி
என்ன விட்டு ஏன் போன பாட்டி
உன்ன எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா ?
என்ன விட்டு ஏன் போன பாட்டி
உன்ன எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா ?
Grandma
Why did you leave me
and go away , Grandma,
Do you know how
much I like you
பாட்டியும் ஒரு தாய் தான்னு நீ எனக்கு வாழ்ந்து காட்டியிருக்க
பாட்டியும் ஒரு தாய் தான்னு நீ எனக்கு வாழ்ந்து காட்டியிருக்க
You lived as an example and showed me that Gradma
is also a Ma
நீயும் அம்மாவும் மாமியார் மருமகள் இல்லை
அம்மா மகள் தான்
நீயும் அம்மாவும் மாமியார் மருமகள் இல்லை
அம்மா மகள் தான்
You and my mother
are not mother in law and daughter in law,
But mother and
daughter
உன் மேல கோவமா இருக்கன் பாட்டி
அழுகையா வருது
ஏன் பாட்டி போன...
ஏன் போன ...
எங்கிட்ட சொல்லிருந்தா நான் சரி செய்திருப்பனே பாட்டி
எங்கள எல்லாம் விட்டு
எப்படி போக உனக்கு மனசு வந்துது
உன் மேல கோவமா இருக்கன் பாட்டி
அழுகையா வருது
ஏன் பாட்டி போன...
ஏன் போன ...
எங்கிட்ட சொல்லிருந்தா நான் சரி செய்திருப்பனே பாட்டி
எங்கள எல்லாம் விட்டு
எப்படி போக உனக்கு மனசு வந்துது
I am very angry with you grandma,
I am feeling like crying.
Why dd you go away, grandma
Had you told me I
would have made everything alright
How were you
agreeable to go away, leaving all of us
உங்களுக்கு நினைவிருக்கிறதா பாட்டி ...
உங்களுக்கு நினைவிருக்கிறதா பாட்டி ...
Do you remember Grandma
நீ கூட இருக்கற தைரியத்ல
ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல
எடை போட்டுகிட்டே இருக்கும் போது தூங்கிட்டன்...
நீ தான் எப்பயும் போல காலை நீட்டி போட்டுக்கிட்டு
வெத்தலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்திருப்பாய் ...
எனக்காக என் பாட்டி இருக்கிறார்கள் இறைவனாக ...
.
With the courage
that you were with me,
In a lonely
spot , when I was weighing I slept ,
Just like other days with your stretched legs,
You would have seen it while chewing Pan,
My Grandma is there
for me as my God
உனக்கு என்ன நான் செய்யப்போறன் பாட்டி ...
எங்க வந்து செய்யப்போறன்
இந்த பேத்தி உனக்காக என்ன செய்யணும் பாட்டி
சொல்லு பாட்டி
என் உசுர கொடுத்தாவது செய்றன்
உனக்கு என்ன நான் செய்யப்போறன் பாட்டி ...
எங்க வந்து செய்யப்போறன்
இந்த பேத்தி உனக்காக என்ன செய்யணும் பாட்டி
சொல்லு பாட்டி
என் உசுர கொடுத்தாவது செய்றன்
Whatever can I do for you Grandma ,
Where would I come
and do it ,
What this granddaughter should do to you grandma.
Please tell me Grandma.
I will do it even
by sacrificing my soul
எப்பொழுதும் உன் நாணயத்தை தந்து எண்ணு என்பாய் ...
நான் தராசு போல் என்று நீ அறிவாய் ...
தராசும் ஒரு பக்கம் சாயும் ...
ஆனால் நான் எடை போடும் போது தங்கம் புடம் போடப்படும்
எல்லோருக்கும் உன்னை மிகவும் பிடிக்கும் ....
நம் வீட்டில் எல்லோரும் நல்லவர்கள் .
எப்பொழுதும் வேண்டிக்கொள்வேன்
எல்லா உயிர்களுக்கும் முன்
என் உயிரை முதலில் எடுத்துக்கொள் இறைவா என்று ...
ஏன் நீ போனாய் பாட்டி
எப்பொழுதும் உன் நாணயத்தை தந்து எண்ணு என்பாய் ...
நான் தராசு போல் என்று நீ அறிவாய் ...
தராசும் ஒரு பக்கம் சாயும் ...
ஆனால் நான் எடை போடும் போது தங்கம் புடம் போடப்படும்
எல்லோருக்கும் உன்னை மிகவும் பிடிக்கும் ....
நம் வீட்டில் எல்லோரும் நல்லவர்கள் .
எப்பொழுதும் வேண்டிக்கொள்வேன்
எல்லா உயிர்களுக்கும் முன்
என் உயிரை முதலில் எடுத்துக்கொள் இறைவா என்று ...
ஏன் நீ போனாய் பாட்டி
Always you would give
your money and say “count”.
You knew that I am
like a balance,
Balance may tilt
to one side,
But when I weigh ,
the purity of gold would be tested,
All people in our
home like you,
All the people in our home are good,
I always pray ,
before taking any one’s.
Soul , please take mine,
Grandma why did
you go away ?
உனக்காக நான் ஒன்றுமே செய்யவில்லையே பாட்டி ...
என் பாட்டி ரொம்ப பாசமா இருப்பாங்க ...
அவங்களுக்கு காப்பி பிடிக்கும் ...பூசணிக்காய் பிடிக்கும் ...மாத்திரைனா ரொம்ப பிடிக்கும் ...
For your sake I
have not done anything whatsoever , Grandma
My grandma would be very affectionate ,
She likes coffee
very much,
She liked ash
gourd and also tablets
நான் உன்னை எப்பொழுதாவது
எனக்கே தெரியாம வருத்தப்படவச்சிருந்தா
என்ன மன்னிச்சிடு பாட்டி ..
நான் உன்னை எப்பொழுதாவது
எனக்கே தெரியாம வருத்தப்படவச்சிருந்தா
என்ன மன்னிச்சிடு பாட்டி ..
.
Suppose at any time
,
Without any
intention , suppose I had made you sad,
Please pardon me Grandma
உன் ஊர்
இயற்கை நிறைந்த ஊர் பாட்டி ....
எங்கேயும் முந்திரி தோப்பு ...
பலா மரம் ....
ஊத்து தண்ணி ஓடை ....
அந்த ஓடைய தாண்டும் போது தவறி விழ பாத்தன் பிடிச்சிட்டாங்க ...
எனக்கு அப்ப நாலு வயசு இருக்கும் ....
உன் ஊர்
இயற்கை நிறைந்த ஊர் பாட்டி ....
எங்கேயும் முந்திரி தோப்பு ...
பலா மரம் ....
ஊத்து தண்ணி ஓடை ....
அந்த ஓடைய தாண்டும் போது தவறி விழ பாத்தன் பிடிச்சிட்டாங்க ...
எனக்கு அப்ப நாலு வயசு இருக்கும் ....
Your village was filled with nature,
Lots of cashew trees,
Lot of jack fruit trees,
A canal where spring water used to flow,
When I was trying to cross it, I was about to fall, Some one saved me ,
At that time I
was about four years
உன்னோட பிதற்றலை கேக்கும் போது
நீ தாத்தா மேல உண்மையா பாசம் வச்சிருப்பதும் ...
அம்மா உங்களுக்கு இன்னொரு தாய் ...
நானும் என் அம்மா போலவே இருப்பன் பாட்டி ....
நம்ம குலப் பெருமைய எப்பயும் என் உயிருக்கும் மேல மதிச்சி காப்பாத்துவன்....
உன்னோட பிதற்றலை கேக்கும் போது
நீ தாத்தா மேல உண்மையா பாசம் வச்சிருப்பதும் ...
அம்மா உங்களுக்கு இன்னொரு தாய் ...
நானும் என் அம்மா போலவே இருப்பன் பாட்டி ....
நம்ம குலப் பெருமைய எப்பயும் என் உயிருக்கும் மேல மதிச்சி காப்பாத்துவன்....
When we heard
your meaningless prattles,
WE would know how true is your affection to Grandpa,
My mother is
another mother to you ,
Grandma , I would also be like my mother ,
I would protect
the greatness our clan even by giving my life
உன்னை வந்து பாக்கணும் பாட்டி ....
நீ இங்கே தான் இருக்க பாட்டி
அந்த மரத்துல இருக்க ....
இந்த காத்துல இருக்க ....
நான் நடக்கும் போது பாதையா வர்ற ....
உன்னை வந்து பாக்கணும் பாட்டி ....
நீ இங்கே தான் இருக்க பாட்டி
அந்த மரத்துல இருக்க ....
இந்த காத்துல இருக்க ....
நான் நடக்கும் போது பாதையா வர்ற ....
I want to come
there see you Grandma,
You are here only Grandma ,
You are on that
tree
You are in the wind,
When I walk you
are coming as my road
உண்மையான அன்புக்கு உருவம் கிடையாது ....
என் பாட்டி எப்பயும் என் கூடவே தான் இருக்காங்க ...
உண்மையான அன்புக்கு உருவம் கிடையாது ....
என் பாட்டி எப்பயும் என் கூடவே தான் இருக்காங்க ...
Real love does not have any form,
My grandma is always
with me.
ஒரு நாள் நான் என் பாட்டி இருக்க இடத்துக்கு போவன்...
அங்க உணர்வுகள் வாழற இடம் ....
வார்த்தைலாம் அங்க இல்லை ...
உருவம்லான் அங்க கிடையாது ...
உள்ளம் மட்டுமே
காற்றோடு கலந்த ஆத்மா மட்டுமே
தூய்மையான மனிதம் வாழற இடம் ....
One day I will also go to
the place where my grandma is
there,
It is the place
where emotions live ,
There are no words
there,
There are no forms there,
Only minds are
there,
Only the soul
merged with wind would be there,
It is the
place where pure humanity lives
உன்னை எவ்ளோ பிடிக்கும்னு சொல்லவே முடியாது பாட்டி
ஏன்னா உன்ன அவ்ளோ பிடிக்கும் .....
உன்னை எவ்ளோ பிடிக்கும்னு சொல்லவே முடியாது பாட்டி
ஏன்னா உன்ன அவ்ளோ பிடிக்கும் .....
I can never tell you how much I like you,Grandma,
For I like you so, so much
எப்பயும் நீ மகிழ்ச்சியா இருக்கணும் பாட்டி ...
நீ போயிருக்க கூடாது பாட்டி .....
எப்பயும் நீ மகிழ்ச்சியா இருக்கணும் பாட்டி ...
நீ போயிருக்க கூடாது பாட்டி .....
You should always be happy
You should not
have gone away
அமைதி நிலவும் இடத்தில் மகிழ்ச்சியா இரு பாட்டி ....
ஒரு நாள்
உன்னோடே உன்னுடனே எப்பயும் இருப்பன் பாட்டி ....
உனக்கு ரொம்ப வலிச்சிருக்கும் இல்லை பாட்டி ....
நீ துடிச்ச துடிப்பு உனக்கு இனி எப்பயும் கெடையாது பாட்டி .....
உனக்கு பிறவியே கிடையாது ...
நீயும் தாத்தாவும் இனி பிரியவே மாட்டிங்க .....இருவருக்கும் பிறப்பறுக்கப்பட்டது பாட்டி ...
Grandma live in that place of peace with great joy
One day
I would come and
stay with you permanently
Grandma, It would
have caused great pain to you
The struggle that you underwent is never again for you,
You do not have any more birth
You and Grandpa
would always be together now,
The births have ended
for both of you
தாத்தா எப்படி இருப்பார் என்று தெரியாது ,....
அன்பிற்கு ஏது உருவம் .....
என் தாத்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும் பாட்டி ...
I do not know how my grandpa would look like ,
Has affection any form?
I like my grandpa too much, Grandma
* குறிப்பு : எல்லோரும் ஒரு நாள் அங்கே போவார்கள் ...
இறப்பு என்பது தானாக வர வேண்டும் ....
நாம் நம் வாழ்க்கையை மட்டுமே அனுபவித்து வாழ பிறந்தவர்கள் .
Note :One day every one would go there,
Death should come by itself
WE have come live here to enjoy only our life
நம் கதையை முடிக்கும் அனுமதி நம்மிடம் இல்லை...
அது கோழைத் தனம் ...
WE do not have permission to end our own story
That is cowardice
No comments:
Post a Comment