Am I?
Translated By
P.R.Ramachander
(text taken from Halasya Sundaram’s post Written by
Injimedu Kalyanam )
For
you to come running, when I call you,
Am I prahladha
For me to give as soon as you ask,
Am I Mahabali
Without battling an eye to look
after you,
Am I lord Lakshmana
To fight the way
as per your advice,
Am I Arjuna
For ever to collect terrible interest from you,
Am I kubhera
To
do fanning as service , whenever you sweat,
Am I Thirukachi Nambi
To dream to get
married to you,
Am I lady Aandal
To reclaim you back by calling you “My pet son”
Am I the great sage of perum puthur
My mistake , do pardon me,
Due to desire, I compared myself with them
I am
an ordinary fellow toiling in the
day to day life,
I am one who feels that remembering Hari is indeed pleasure
நான் என்ன?
நான் கூப்பிட்டவுடன் நீ ஓடி வர
நான் என்ன ப்ரஹ்லாதனா
நான் என்ன ப்ரஹ்லாதனா
நீ கேட்டவுடன் நான் கொடுக்க
நான் என்ன மஹாபலியா
நான் என்ன மஹாபலியா
கண் கொட்டாமல் உனைக் காத்திட
நான் என்ன லக்ஷ்மணனா
நான் என்ன லக்ஷ்மணனா
நீ சொன்னபடியெல்லாம் சண்டை போட
நான் என்ன அர்ச்சுனனா
நான் என்ன அர்ச்சுனனா
காலமெலாம் உன்னிடம் கந்து வட்டி வசூலிக்க
நான் என்ன குபேரனா
நான் என்ன குபேரனா
உன் புழுக்கத்திற்க்கு விசிறி கைங்கரியம் செய்ய
நான் என்ன திருக்கச்சி நம்பியா
நான் என்ன திருக்கச்சி நம்பியா
கைத் தலம் பற்ற கணாக் கண்டிட
நான் என்ன கோதை நாச்சியாரா
நான் என்ன கோதை நாச்சியாரா
செல்லப் பிள்ளையே என அழைத்து மீண்டெடுக்க
நான் என்ன பெரும்புதூர் மாமுனியா
நான் என்ன பெரும்புதூர் மாமுனியா
அபசாரம் அடியேனை பொறுத்தருள்க
ஆவலினால் இவர்களுடன் ஒப்பிட்டு விட்டேன்
ஆவலினால் இவர்களுடன் ஒப்பிட்டு விட்டேன்
அன்றாட சம்சார வாழ்வில் உழலும் அற்பன் நான்
ஆளரியை நினைப்பதுவே சுகமென்றிருப்பவன் நான்
ஆளரியை நினைப்பதுவே சுகமென்றிருப்பவன் நான்
நன்றி: இஞ்சிமேடு கல்யாணம் சார்.
No comments:
Post a Comment