Thursday, February 15, 2018

Love Poem(story)

Love  Poem(story)

By
Saanu Puthiran

Translated and rewritten by
P.R.Ramachander




(My face book friend SAanu puthiran is a great tamil poet   and a c very great devotee  of Maha Periyava, Rarely he writes  poems  on any other  subject  .i was  very much attracted  by his poem(story)  on love  and am presenting it in english. No soul of a poem can be translated  but only an attempt can be made.0

They wanted   me  to, Write a  poem on love
Due  to my interest in love , I am   starting to write  ,
A poem about  love   as  i  understood it
It seems  living without love , Is equivalent   to death .
And  also   the one  who does  not write  about love  is no  poet at all

It seems that  love  that does not , part the lovers  even after their  death  ,
Is the   greatest   ever love,  for  even if the lovers die,
It seems    the love will not die and  would always live
 I am writing   about a love story that continued   even after  death,
With   very great  love and with   sorrow  about  the death.

It seems   two butterflies  which used   flap their wings fell in love
And the love bells which  tried  to herald  about  their love wanted
To find out  who among them loved the other  more and
It pointed   out   a well grown   lotus flower   in a pond ,
Which  was greatly praised   by  its foaming   waves

Those two darlings   who loved each other  took a decision,
That  whosoever  sits on that flower first, next day morning.
Has definitely more love than the    other   darling .
A very sweet morning  arose   very sweetly next day,
The horizon started   becoming red  ,
The sun’s rays filled up the  lap  of the lady called    earth.

The  male insect   was eagerly   waiting to sit first   on that  lotus flower,
And was waiting  the flower  to open as soon as  the light of the sun  fell on it ,
Like   the lily which dancing  opened  its petals   when  it saw  the face  of the moon.
And the arms   of the ray  of  the infant sun   which  slowly rose  to show its face ,
Up from the  mountain top slowly  rubbed it  to the top of the stem of the flowers 

The male insect   which came  near  the flower  , flapping its wings,
Much before the lotus flower opened continued  to wait     for saw ,
The pretty lotus  opening  its petals and the sun with its rays   slowly,
Moved over   the water  and rubbing   the tender stem of the lotus flower
When it touched  the tip of the bud suddenly  the  lotus flower opened   all  its petals.

The male insect   which was waiting  as if  for a nectar  saw  the flower,
And the next moment   was completly   shaken for   there inside the  lotus flower ,
The female  insect lay   dead because   to prove  its love was better  ,
It had sat  inside   the flower  in the   previous evening  itself and died,
When  the flower closed and seeing her dead, the male insect  also fell dead

It seems   even if lovers  die   their love never dies , and    the two eyes  ,
Which are  reading   these  words are  a witness  to this   fact that  their love  was still alive,
But the love   which had woken up between those  two , wanted,
That either  they or  it should live   proving   the  fact  that a  real sweet heart,
Would give her life  to protect you  but a cheating   heart   would not.

Had the love  lived along with lovers  it   would have been better ,
Than the love living  and lovers  dying  as it would  have succeded,
And that  love would have been honoured   as well as respected,
Long live love   and let  lovers   also live  along   with that love.

காதல் (வி)தை ஒன்று
எழுதக் கேட்டனர்...

காதல் பற்றினால்
காதலைப் பற்றிய
(வி)தையை
எழுதத் துவங்குகிறேன்...
உணர்ந்தறுந்தபடியாக!


காதலில்லாது வாழ்தல்
சாதலுக்குச் சமமாம்

காதலை எழுதாதவன்
கவிஞன் ஆகமாட்டானாம்

சாதலிலும் கலையாத
காதலே
சாலச்சிறந்த காதலாம்

காதலர் செத்து மடிந்தாலும்
காதல் மட்டும் சாகாதாம்
செத்தும் மிளிர்ந்த
காதல் கதையொன்றைக்
கவிதையாய்
காதலோடு எழுதுகிறேன்


சிறக்கச் சிறகடிக்கும்
இரு பட்டாம்பூச்சிகள்
காதல் வயப்பட்டதாம்!

யாருக்கு
மற்றவர் மீது
காதல் அதிகம் என
கட்டியம் கூறிட
எத்தணித்ததாம்
காதல் கிண்கிணிகள்!
.
திரை போற்றும்
தடாகம் ஒன்றில்
திளைத்து வளர்ந்த
தாமரையைக் காட்டி… 


நாளை காலை
யார் இதன் மீது
முதலில் அமர்வரோ
அவருக்கே
அதீத காதல் உண்டுஎன
தீர்மானம் கொண்டன
காதல் கொண்ட
கண்மணிகள் இரண்டும்!

இனியதோர் காலை
இனிக்கப் பிறந்ததுவாம்.
கீழ்வானம் சிவக்கத் தொடங்கியது
நிலப் பெண்ணாள் மடியில்
நிரம்பினவாம்
கதிரொளிகள்!
நிலவின் முகம் கண்டு
அல்லிப்பெண்
இதழ் விரித்தாடியது போலே
கதிரவனின் கரம் பட்டதும்
மலரத் துடித்த
தாமரையின் மேல்
முதலில் வந்து அமர
ஆவலோடு காத்திருந்ததாம்
ஆண் பூச்சி.
மலை முகட்டின் மேல்
மெல்ல மெல்ல
தன் முகம் காட்டி வந்த
இளங்காலைக் கதிரோனின்
கதிர்கரங்கள்
சிறுகச் சிறுக
நீர் நிலையில்
கோலாகலமாக நின்றிருந்த
மலராளின் மெல்லடி நோக்கி
நகர்ந்து வந்ததாம்.
தாமரையாள்
மலர்வதற்கு முன்பாகவே
படபடவென
சிறகடித்துக் கொண்டு
அருகே வந்த ஆண் பூச்சி
கனிமலராள்
தன் இதழ்விரிக்கக்
காத்திருந்ததாம்.

நீரில் மேற்பரப்பாய்
மெல்ல நகர்ந்து வந்த
கதிரொளியோன்
கனிமலர்த் தாமரையாளின்
தண்டுகளில் ஊறி
உராய்ந்து
மெல்ல மெல்ல
மேலேறி
மொட்டுக்களின் உச்சியைத் தொடுகையில்
சட்டென மலர்ந்தனவாம்
தாமரையாள் இதழ்களெலாம்.
அமுதமாய்
அருகே வந்துக் காத்திருந்து
கண்ணுற்ற
ஆண் பூச்சி
அடுத்த நொடியில்
அதிர்ந்துப் போனதாம்… 

ஆங்கே
தாமரைக்குள்ளேயே
பெண்பூச்சி
செத்துக் கிடந்ததாம்.
தன் அன்பை உணர்த்திட
முதல் நாள் மாலையே
வந்தமர்ந்து கொண்ட
அந்த பட்டாம்பூச்சி
தாமரை மூடிக் கொண்டதால்
மூச்சுத் திணறி
மாண்டு போனதாயிற்றே!
அன்னவள்
ஆங்கே
அசைவின்றிக் கிடப்பதைக் கண்ட
காதலுற்ற ஆண் பூச்சி
அன்பின் மிகுதியாலே
அதுவரையில்
அடித்துச் சிறந்த
இறக்கைகள் இரண்டும்
அயர்ந்துத் தொங்க
இறந்து விழுந்ததாம்.
காதலர்கள் செத்தாலும் கூட
காதல் சாவதில்லை தாம்
.

இன்றும்
இவ்வெழுத்துக்களிலே
அந்தக் காதல்
வாழ்ந்து கொண்டிருப்பதற்கு
இதனைக் காணுறும்
சோடிக் கண்களெல்லாம்
சாட்சி

உயிர்த்த இந்தக் காதல்
உணர்வுகளினூடே
ஒன்றை மட்டும்
இருக்கச் செய்துவிட்டதே…!
உண்மைக் காதலியாயின்
உன்னைக் காக்கத்
தன்னுயிர் கொடுப்பாள்ஆனால்
காதல்விட்டுக் காதல் மாறும்
கயவக் காதலியோ
தன்னைக் காக்க
உன்னுயிர்ப் பரிப்பாள்!
எது எப்படியோ…!!!
காதலர்கள் இறந்து
காதல் சிறப்பதைக் காட்டிலும்
அவர்கள் வாழ்ந்து சிறந்தால்
காதலுக்கு மரியாதை
தான்!
காதல்
எவர் மனமும் காயாதபடியாக
வாழ்ந்து சிறக்குமேயானால்
காதலுக்கு மரியாதை
மிக மிக அதிகம் தான்!
காதல் வாழ்க!
காதலர்களும் வாழ்ந்து
காதல் வாழ்வாங்கு வாழ்க!
- விரல் நுணி வாசம்.


No comments: